Cricket, India, Yuvraj Singh, Suresh Raina, Virat Kohli

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை கடந்த ஜூன் 10-ம்தேதி அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிகழ்சியில் யுவராஜ் சிங் கூறியதாவது:-இந்த இரண்டு பந்துவீச்சாளர்களை பார்த்தால் எனக்கு பயம்: யுவராஜ் சிங் ஓப்பன் டாக் 1

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளுடனும் விளையாடியுள்ளேன். பல்வேறு அணி வீரர்களின் பந்து வீச்சினை ஏதிர் கொண்டுள்ளேன். ஆனால் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரனின் பந்தினை ஏதிர்கொள்வது என்பது எப்போதுமே மிகவும் கடினமாக இருந்தது. அவரைப் போலவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் பந்து வீச்சையும் எதிர்கொள்ளவே முடியாது.

நான் பார்த்து மிகவும் பிரம்மித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். அவரது பேட்டிங் திறமை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. அவரை போலவே மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரது ஆட்டமும் என்னை பிரம்மிக்க வைத்தது.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.Cricket, Virender Sehwag, Muttiah Muralitharan, India, Sri Lanka

மேலும்,,,

ரோஹித் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், “எதுவும் கடந்து போகும்வரை உன்னிடம் என்ன உள்ளது என்பது உனக்குத் தெரியாது, உன்னை நேசிக்கிறேன் சகோதரா.. நல்ல பிரியாவிடைக்கு தகுதியானவர்தான் நீங்கள்” என்று ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றியுடன் பதிலளித்த யுவராஜ் சிங், “நான் உள்ளுக்குள் எப்படி உணர்கிறேன் என்பது உனக்குத் தெரியும். நேசிக்கிறேன் சகோதரா, நீ ஒரு லெஜண்ட் ஆகப்போகிறாய்” என்று உணர்ச்சிகரமாக ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் நிச்சயம் இன்னும் சிறந்த பிரியாவிடைக்கு யுவராஜ் தகுதியானவரே என்று பிசிசிஐக்கு அறிவுறுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இது தொடர்பான #YuviDeservesProperFarewell #YuvrajSingh என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *