ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் – வாசிங்டன் சுந்தர்
இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டார் வாசிந்தான் சுந்தர் தனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த வருடம் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய வாசிங்டன் சுந்தர் தமிழ்நாடு ரஞ்சி அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
இதனால் பயந்து போயிருந்த வாசிங்டனின் வீடு கதவை தட்டியது ஐபில் வாய்ப்பு. 2016ஆம் ஆண்டு ரைசிங் புனே அணிக்காக ஆட தேர்வு செய்யப்பட்டார் அவர். அதன்பின்னர் தனது வாழ்க்கை பல வழிகளில் மேம்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் என் குடும்பம் சிரமத்தில் இருந்து மீண்டது. அந்த வாய்ப்பு கிடைத்து பின்னர் இந்திய அணிக்கு தேர்வானேன். அதுவரை ரண்ணால் இந்திய அணிக்காக ஆட முடியுமா என யோசித்து கொண்டிருந்தேன். அந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும்.

என் வீட்டில் பொருளாதார ரீதியாகவும் பல மாற்றம் ஏற்பட்டது. சிறு வயது முதலே நான் என் அக்காவுடன் தான் ஒரே அறையில் இருந்தேன். பல நேரங்களில் தனியாக இருக்க முடியாது. அது கடுப்பாக இருக்கும்.
தற்போது அது மாறியுள்ளது. தனியாக இருக்க நேரம் கிடைததுள்ளது. ஐபிஎல் தொடர் எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
என கூறினார் சுந்தர்.