உங்களுக்கு வேற ஒன்னு வச்சிருக்கேன்: இந்திய பந்துவீச்சாளர்களை எச்சரிக்கும் பிராத்வெயிட் 1

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான பிராத்வைட் பேட்டிங் ஸ்டைலை மாற்றுவது குறித்து யோசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பிராத்வைட். வேகப்பந்து வீச்சு அதிரடி ஆல்ரவுண்டரான அவர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 82 பந்தில் 101 ரன்கள் விளாசினார்.

ஆனால் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கிடையாது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரில் பிராத்வைட் 9, 10 மற்றும் 0 என சொற்ப ரன்களிலேயே ஆட்டம் மிழந்தார்.உங்களுக்கு வேற ஒன்னு வச்சிருக்கேன்: இந்திய பந்துவீச்சாளர்களை எச்சரிக்கும் பிராத்வெயிட் 2

இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பி வருகிறது. இதனால் பந்து சிக்சருக்கு அனுப்பும் ஷாட், ஸ்விப் ஷாட் மற்றும் முறையான முறையில் பேட்டிங் செய்யும் வகையில் பேட்டிங்கை முறையை மாற்ற யோசித்து வருகிறார்.

இதுகுறித்து பிராத்வைட் கூறுகையில் ‘‘பேட்டிங்கை பொறுத்த வரையில் என்னுடைய யோசனையை மாற்றுவதற்கான வேலையில் இறங்கியுள்ளேன். நான் போதுமான வகையில் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேட்டிங் குறித்து ஆலோசித்து வருகிறேன்.

தற்போது எனது நினைப்பில் இருக்கும் ஒரு சிந்தனை எனது பிட்னஸ் குறித்துதான். கடந்த 12 முதல் 14 மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். என்னால் மிகவும் ஸ்டிராங்கான வீரராக முடியும் என்று நம்புகிறேன்’’ என்றார்.உங்களுக்கு வேற ஒன்னு வச்சிருக்கேன்: இந்திய பந்துவீச்சாளர்களை எச்சரிக்கும் பிராத்வெயிட் 3

இந்நிலையில், குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர், முகமது ஷமி. 56 ஆட்டங்களில் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பும்ரா ஒரு ஆட்டம் அதிகமாக விளையாடி இந்த இலக்கை அடைந்துள்ளார். உலகளவில் 44 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் ரஷித் கான்.

முகமது ஷமியின் சாதனையை நெருங்கிவிட்டார் 24 வயது சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். 53 ஒருநாள் ஆட்டங்களில் 96 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இன்னும் இரு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகள் எடுத்தால் ஷமியின் சாதனையைத் தாண்டிவிடுவார். ஆனால் சமீபகாலமாக அவருடைய பந்துவீச்சின் தாக்கம் மிகவும் குறைந்துவிட்டது.உங்களுக்கு வேற ஒன்னு வச்சிருக்கேன்: இந்திய பந்துவீச்சாளர்களை எச்சரிக்கும் பிராத்வெயிட் 4

முதல் 33 ஆட்டங்களில் 67 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய குல்தீப், கடைசி 20 ஒருநாள் ஆட்டங்களில் 29 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் 7 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள 3-வது ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சை ரசிகர்கள் மிகவும் கவனிப்பார்கள். இது குல்தீப்புக்குப் புதிய சவாலாக இருக்கும்.

சோதனைகளைக் கடந்து சாதிப்பாரா குல்தீப் யாதவ்?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *