மன்காட் செய்த போது இப்படித்தான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறீர்களா என அஸ்வினிடம் நான் கேட்டேன் என ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.
ஐபிஎல் 2019-ஐ கலக்கி வரும், பட்லரை அஸ்வின் செய்த மன்கட் ரன் அவுட் விவகாரத்தில் ஜோஸ் பட்லர், தனக்கு அவுட் கொடுத்தது தவறு என்றும் அஸ்வின் பந்தை ஆக்ஷனுக் கொண்டு வரும் போது தன் கால் க்ரீசில் இருந்தது என்றும் அஸ்வின் நான் வெளியே வரும் வரை தாமதம் செய்து ரன் அவுட் செய்தார், இது ஒரு தொடருக்கு அழகான தொடக்கம் அல்ல என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அஸ்வின் தன் பங்கிற்கு ‘என் மனசாட்சி சுத்தம்… விதிப்படி அது அவுட்தான், அவ்வாறு அவுட் செய்யக் கூடாது எனில் ரூலை மாற்ற வேண்டியதுதான்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.
அஸ்வினுக்கு புரியாத பிரச்சினை என்னவெனில் இந்த ஐபிஎல் என்ன பெரிய கிரிக்கெட்டா? நீண்ட தொடர் இதில் எவ்வளவோ அழுகுணிகள் நடக்கின்றன, அதையெல்லாம் நல்ல கிரிக்கெட் மூலம் மறக்கச்செய்ய வேண்டிய ஒரு வீரராகத் திகழ வேண்டிய அஸ்வின் இந்த அழுகுணியில் போய் விழுந்துவிட்டாரே என்பதுதான் தூய கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
ஆஜ் தக் டிவியில் அவர் கூறியதாவது:
“தற்காப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. நான் அன்றைய தினமே கூறியது போல் இது உள்ளுணர்வின் உந்துதலால் சொல்லப்பட்டது. பட்லர் கிரீசை விட்டு வெளியேறுவார் நம் அவரை அவுட் செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே முடிவு திட்டமிடப்பட்டதல்ல. ஆனாலும் அவர் 4, 5 முறை அவர் அவ்வாறு செய்தார். என் பவுலிங்கில் அன்று அவர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே தான் அவர்கள் பந்தை தள்ளிவிட்டு ஒன்று, இரண்டு என்று எடுத்தனர்.
அவர் 4-5 முறை கிரீஸை விட்டு வெளியே சென்றதை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். விதியில் இருந்தது அதனால் ரன் அவுட் செய்தேன். பேட்ஸ்மேனுக்குத்தான் கிரீசிற்குள் நிற்கும் பொறுப்பு உள்ளது.
என்னை உறுத்தும் ஒரு விஷயம் என்னவெனில் பந்து வீச்சாளர்கள் எப்படி பலிகடாவாக்கப்படுகின்றனர் என்பதே. 22 யார்டுகளுக்குள் நான் கட்டுப்பாடுடன் பவுலிங் செய்ய வேண்டுமென்றால் அதே 22 யார்டு ரூல் பேட்ஸ்மேனுக்கும்தானே. அவர் எவ்வளவு தூரம் மேலேறினார் என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது, ஆனால் 1 ரூபாய் திருடினாலும் திருட்டுதானே, அதே போல் விதிக்குப் புறம்பாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் அது அவுட் தானே” என்று புலம்பித்தள்ளியுள்ளார் அஸ்வின்.