விராட் கோலி மிக சிறந்த வீரராக உருவெடுப்பார் என்று தனக்கு 2009-ம் ஆண்டிலேயே தெரியும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக தாம் செயல்பட்ட போதே, அணியில் இளம் வீரராக இருந்த கோலியின் செயல்பாடு தனித்துவமாக இருந்ததாக கூறியுள்ளார் பீட்டர்சன். கோலி அப்போது சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகியிருக்கவில்லை.
இருந்த போதிலும் ட்ரெஸ்ஸிங் ரூம் மற்றும் பேருந்துகளில் ஒன்றாக பயணிக்கும் போது, அவருடன் இணைந்து விளையாடிய போதும் அவர் கிரிக்கெட்டை ஆர்வமாக கற்றுக்கொள்வதில் ஈடுபாடு காட்டிக்கொண்டே இருந்தார். அவர் விளையாட்டை அணுகிய விதம் மற்றும் அவர் கேட்ட கேள்விகள் என அனைத்துமே கோலி மிக சிறந்த வீரராக உருவெடுப்பார் என்பதை உணர்த்தியது என்று கூறியுள்ளார் பீட்டர்சன்.

அதே போல கோலிக்கும் எனக்கும் இடையே ஒரு ஆத்மார்த்தமான நட்பு இன்றும் உள்ளது. அனேகமாக இந்த நட்புக்கு அவர் இளைஞனாக இருந்தபோது அவரை நான் நடத்திய விதமும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் நான் அவருக்கு உதவி செய்த விதமும் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் பீட்டர்சன்..
இந்நிலையில்,
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்தது. மழையால் போட்டி கைவிடப்பட்டது.
2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் 18-ந்தேதியும் நடைபெற இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை ரசிகர்கள் யாரும் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் மாநில அரசுகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை பாதுகாப்பு காரணத்திற்காக ரத்து செய்து வருகிறது.
இன்று லக்னோ வந்த இந்திய வீரர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். டெல்லி அரசு ஐபிஎல் போட்டிக்கு அனுமதி அளிக்காது என்று கூறியிருந்தது. இதனால் ஐபிஎல் போட்டியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெருக்கடி அதிகமாவதை உணர்ந்த பிசிசிஐ இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான எஞ்சிய இரண்டு போட்டிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.