இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பான்யா, தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஓவ்வொரு போட்டியிலும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறேன் – ஹர்திக் பாண்ட்யா
இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா (வயது 24). இங்கிலாந்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்ட்யா சிறப்புடன் செயல்பட்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன். பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.
நான் ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் என்பதனை உறுதி செய்து கொள்கிறேன். அது எனக்கு உதவிடுகிறது என கூறியுள்ளார்.
எனது பந்து வீச்சில் முதல் ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்ட தருணத்தினை நான் நினைவில் கொள்கிறேன். நான் இயல்புடனேயே இருந்தேன். நீங்கள் சரியான தொலைவில் பந்து வீசினால் விக்கெட்டுகளை கைப்பற்றி, மிக பெரிய அளவில் ரன்கள் விட்டு கொடுப்பதனை நிறுத்திடலாம் என அவர் கூறியுள்ளார்.
வெற்றிக்கு பின்னர் ரோகித் சர்மா கூறும்போது, ‘இந்தப் போட்டியில் நான் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. போட்டியை தொடங்கும் முன் சூழ்நிலைகளை அறிந்துகொள்வது முக்கியம். விக்கெட், பேட்டிங்கிற்கு உகந்ததாக இருந்தது என்பதை தெரிந்துகொண்டோம். முதலில் என்னை நிலைப்படுத்திக் கொண்டு ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படியே விளையாடினேன். நான் அமைதியை விரும்புபவ ன். அதிகம் பீதியடைய மாட்டேன்.
முதலில், விக்கெட் இழக்காமல் நின்றால் பின்னர் ரன்களை குவிக்கலாம் என்று நினைத்து ஆடினேன். மிடிலில் சிறிது நேரம் நின்று ஆடுவது முக்கியம். அதோடு பந்துவீச்சாளர்களை கவனிப்பதும் முக்கியம். ஹர்திக் பாண்ட்யா சிறந்த வீரர். கடந்த சில வருடங்களாக அவர் சிறப்பாக ஆடிவருகிறார். அவர் பந்துவீசிய விதம் நம்பிக்கை அளித்திருக்கிறது. அவர் பயமற்ற வீரர். அத னால்தான் அணி அவரிடம் அதிரடியை எதிர்பார்க்கிறது’ என்றார்.