இந்த விசயத்த நான் கத்துக்கிட்டதே தலைவன் தோனி கிட்ட இருந்து தான்; சென்னை அணியின் இளம் வீரர் ஓபன் டாக் !!

சென்னை அணியின் கேப்டன் தோனியிடமிருந்து நான் இதை தான் கற்றுக் கொண்டேன் என்று அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

இந்தத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளில் விளையாடிய இளம் வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகுக்கு தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

அப்படி சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர்களுடைய கிரிக்கெட் கரியர் உதவும்படியும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் பாராட்டுகளையும் சரியான ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.மேலும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தங்களின் சிறப்பான அட்டத்திற்கான காரணத்தையும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில், 24 வயதாகும் சென்னை அணியின் அனுபவமே இல்லாத இளம் வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜித் சிங், நெருக்கடி இல்லாமல் விளையாடுவதை தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

அதில், அனைத்துமே மாகி பாய் தான், அவரிடமிருந்துதான் நான் நெருக்கடியான நேரத்தில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன், டிவியில் பார்பக்கும்போது, ஒரு ஓவருக்கு பின் என்ன நடப்பது என்று நமக்கு தெரியாது, ஆனால் நிஜத்தில் தோனி என்னை வழிநடத்தி சிறப்பாக செயல்படுவதற்கு உந்துகோலாக இருப்பார். தோனி என்னிடம் எப்போதுமே சிறப்பாக பந்து வீசுகிறாய் என்று கூறுவார், அவருடைய வார்த்தையை நான் எப்பொழுதுமே உன்னிப்பாக கவனித்து வருவேன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான என்னுடைய முதல் போட்டியில் நான் அனைவரிடமும் நான் பதட்டமாக இல்லை என்று கூறினேன், ஆனால் உண்மையில் நான் பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தேன், முதன் முதலாக நான் ஸ்டேடியத்தின் உள் நுழைந்த போது மக்கள் கூட்டம் எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்தது, விளையாடாமல் வெளியில் உட்கார்ந்து இருப்பது வேறு ஆடும் லெவனில் விளையாடுவது வேறு என்பதை அப்பொழுது தான் புரிந்து கொண்டேன், வெளியில் இருக்கும் போது அந்த அளவு நெருக்கடியை நான் உணரவில்லை, மேலும் பந்து வீசும் பொழுது முடிவைப் பற்றி யோசிக்காமல் அந்த பந்தை சிறப்பாக வீச வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசித்து வருவதாகவும் சிமர்ஜித் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Mohamed:

This website uses cookies.