டி.20 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா..? தனது கருத்தை ஓபனாக பேசிய டிவில்லியர்ஸ் !!

டி.20 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்களா..? தனது கருத்தை ஓபனாக பேசிய டிவில்லியர்ஸ்

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா இல்லையா என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி.,யால் நடத்தப்படும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரையும் இழந்தது.

இந்திய அணி மீண்டும் கோப்பையை இழந்ததால், வழக்கம் போல் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களும், குழுப்பங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்குமா, இல்லையா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான அடுத்த உலகக்கோப்பை தொடர் வரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடுவது சாத்தியம் இல்லை என்பதால், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் வரையாவது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி.20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்களா இல்லையா என்ற விவாதம் குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து டிவில்லியர்ஸ் பேசுகையில், “ரோஹித் சர்மா  மற்றும் விராட் கோலி ஆகியோர் டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்றே நான் கருதுகிறேன். அவர்கள் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமும். இருவருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு தங்களது வேலையை மிக சிறப்பாக செய்து கொடுத்து வருகின்றனர். இந்திய அணிக்காக ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுத்தாக வேண்டும் என்பதில் இருவரும் வெறியுடன் காத்துள்ளனர். நான் அவர்களது சார்பாக பேசவில்லை, ஆனால் அவர்கள் இருவரும் டி.20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.