'கொரோனா முடியட்டும் அவனுகளுக்கு இருக்கு' எச்சரித்த ரோஹித் சர்மா 1

இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமுடன் காத்திருக்கிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் அதுவும் இந்த முறை டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் திரும்பி இருப்பதால் நிச்சயம் வித்தியாசமான தொடராக இது இருக்கும்’ என்று இந்திய வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வருகிற அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. உலகை மிரட்டும் கொரோனாவின் கோரதாண்டவத்தால் இந்த போட்டி பாதிப்பின்றி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

'கொரோனா முடியட்டும் அவனுகளுக்கு இருக்கு' எச்சரித்த ரோஹித் சர்மா 3
India’s Prithvi Shaw (L) and teammate Mayank Agarwal walk onto the field during day one of the first Test cricket match between New Zealand and India at the Basin Reserve in Wellington on February 21, 2020. (Photo by Marty MELVILLE / AFP) (Photo by MARTY MELVILLE/AFP via Getty Images)
சகஜ நிலை திரும்புவதை பொறுத்தே இந்திய தொடரின் தலைவிதி தீர்மானிக்கப்படும். ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சில தொடர்கள் ரத்தானதால் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் தங்கள் அணி வீரர்களுக்கு ஊதியத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *