இஷான் கிஷன் டபுள் செஞ்சுரி அடிச்சப்போ நானும் அங்கதான் இருந்தேன், அன்று எனக்கு ஒன்னுமட்டும் தான் தோணுச்சு – சுப்மன் கில் பதில்!

இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தபோது நான் அங்கேதான் இருந்தேன், அன்று எனக்கு தோணியது இதுமட்டுமே என மனம்திறந்து பேசியுள்ளார் சுப்மன் கில்.

நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடிய துவக்க வீரர் சுப்மான் கில் 145 பந்துகளில் இரட்டை சதம் அடைத்தார். இவர் 19-4கள், 9-6கள் உட்பட 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் மற்றும் இசான் கிஷான் பின்னுக்கு தள்ளி இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்கிற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன் வெளியில் அமர்த்தப்பட்டு சுப்மன் கில் பிளேயிங் லெவனில் எடுத்துவரப்பட்டார். அதற்காகவும் கில் பல விமர்சனங்களை சந்தித்தார்.

ஆனால், இலங்கை தொடரின் முதல் போட்டியில் 70(60) ரன்கள், 3வது போட்டியில் 116(97) ரன்கள் விளாசினார். இப்போது இரட்டை சதம் அடித்து விமர்சனங்களுக்கு தக்க பதிலை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இஷான் கிஷன் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டுவரும் விவாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு, நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டி முடிந்த பிறகு கொடுத்த பேட்டியில் சுப்மன் கில் பதில் கொடுத்துள்ளார்.

 

“இஷான் கிஷன் எனது நீண்டகால நெருங்கிய நண்பர். என்னுடைய சிறந்த அணி வீரர். இருவரும் ஒரே ஹோட்டல் அறையில் தான் தங்கியுள்ளோம். பங்களாதேஷ் தொடரில் அவர் இரட்டை சதம் அடித்தபோது, நானும் மைதானத்தில் தான் இருந்தேன். அதுவரை அணியில் தனது இடத்திற்காக போராடி வந்தார். அந்த இரட்டை சதம் எவ்வளவு ஸ்பெஷல் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆகையால் அவரைவிட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அந்த போட்டிக்கு முன்புவரை அவருக்கு வாய்ப்புகள் நிறைய மறுக்கப்பட்டன. அவை எதையும் மனதில் கொள்ளாமல் தைரியமாக ஆடினார். அன்று நான் இதை கற்றுக்கொண்டேன். போட்டிக்குள் செல்லும்போது வெளியில் நடந்த எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று. நியூசிலாந்து அணியுடனான போட்டியிலும் அதைத்தான் செய்தேன்.

நாம் செய்தது அனைத்தும் நமக்கு சாதகமாக நடந்தால் எப்படி ஒரு நல்ல மனநிலை மற்றும் திருப்தி இருக்குமோ! அப்படி இருக்கிறது. திருப்திகரமாக உணர்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.