முடியவில்லை

எனக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏன் ஓய்வு அளித்திருக்கிறது என்பது தெரியவில்லை’ என்று இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. யார்க்கர் ஸ்பெஷலிஷ்டான இவர், சமீப காலமாக அந்த அணியில் தேர்வுசெய்யப்படாமல் ஓரங்கப்பட்டு வருகிறார்.

 

இலங்கை சென்றிருந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் பங்கேற்ற மலிங்கா, அதன் பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு கூறியது. இதற்கிடையே இலங்கை விளையாட்டு அமைச்சரின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் தெரிவித்திருந்ததுதான் மலிங்கா ஓரங்கட்டப்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.முடியவில்லை

இந்நிலையில் இஎஸ்பிஎன் -க்கு வழங்கிய பேட்டியில் மலிங்கா கூறியிருப்பதாவது:

எனக்கு ஏன் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 25, 26 வயதுள்ள வீரருக்கு ஓய்வு கொடுத்தால் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு விளையாட காலம் இருக்கிறது. ஆனால், என்னை போன்ற மூத்த வீரர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவோம். இந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு ஓய்வு என்று சொன்னால், இனி விளையாட வாய்ப்பு கிடைக்குமா? இதற்கான காரணம் தெரியவில்லை. 2019- உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதில் நான் இடம்பெற்றால் அதுதான் என் கடைசி தொடராக இருக்கும்.

இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை வருடத்தில் ஓய்வு பெறுவேன் : மலிங்கா 1

நான் விளையாடிய கடந்த 13 போட்டிகளில் 10 விக்கெட் எடுத்துள்ளேன். கடந்த 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் நான் அதிக விக்கெட் எடுக்காத வருடம். இருந்தாலும் அந்த 13 போட்டிகளிலும் எனது பந்துகளில் 12 கேட்ச்கள் விடப்பட்டிருக்கின்றன. எனது பந்துவீச்சு ஃபார்ம் பற்றி என்னிடம் யாராவது பேச முன்வந்தால் நான் பேச தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு மலிங்கா தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *