கிரிக்கெட்டை விட கணித பாடத்திற்கு அதிகமாக உழைத்தேன் மற்றும் அது கடினமானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டு வலைதளத்தின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் கிரிக்கெட் குறித்தும் தனது பள்ளி பருவம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு பின் என்னுடைய உடற்தகுதியில் அதிகமாக கவனம் செலுத்தினேன். அத்துடன் அன்று முதல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
என்னுடைய பள்ளி பருவத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டது கணக்கு பாடத்தை படிக்க தான். குறிப்பாக பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தேர்ச்சி பெற மிகவும் உழைத்தேன். அந்த அளவிற்கான உழைப்பை இதுவரை நான் கிரிக்கெட் வாழ்க்கையில் கூட செய்தது இல்லை.
பொதுவாக கணித பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு நான் 3 மதிப்பெண் எடுப்பேன். எனக்கு கணித பாடம் எளிதாக புரியாது. ஆகவே தான் எப்படியாவது பத்தாவது வகுப்பை முடிக்க வேண்டும் என்று கருதி கடினமாக உழைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
விராட் கோலி திடீரென ‘அத்யாத்மிக’ இந்திய தத்துவவாதியாகி விட்டாரோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வாசகம் ஒன்றுடன் சட்டையின்றி ட்விட்டரில் படம் வெளியிட அது ரசிகர்களின் கேலிக்கு விருந்தாகியது.
தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் விராட் கோலி, “நமக்குள் நாம் உற்று நோக்கினால் வெளியில் எதையும் தேட வேண்டியதில்லை” என்று தொனிக்கும் ஒரு தத்துவார்த்த சொல்லாடலை வெளியிட்டுள்ளார்.
சட்டையில்லாமல் விராட் கோலி இப்படி தத்துவ முத்து ஒன்றை உதிர்க்க ட்விட்டர் வாசிகள் சிலர் சமீபத்தில் டெல்லியில் ட்ராபிக் போலீசிடம் சிக்கி அபராதம் கட்டியிருப்பாரோ என்ற ரீதியில் கேலிக்கணைகளைத் தொடுத்துள்ளனர்.
டெல்லியில் ட்ராபிக் போலீஸார் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களை வதைத்து வருகின்றனர். அன்று இருசக்கரவாகன் ஓட்டி ஒருவருக்கு ரூ.23,000 அபராதமும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.32,500 அபராதமும் விதித்து ‘சாதனை’ படைத்தனர்.
இதனையடுத்து டெல்லி போலீஸையும் விட்டு வைக்காமல் ட்விட்டர் வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோலியின் இந்தப் புகைப்படமும் ‘திடீர் தத்துவ முத்தும்’ ட்ராபிக் அபராதத்துடன் அவரை இணைத்து கேலிக்கு இட்டுச் சென்றது.