ரோஹித் சர்மா, கோஹ்லிக்கே இடம் இல்லை; ஐபிஎல் தொடருக்கான தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் !!

நடப்பு ஐபிஎல் டி.20 தொடருக்கான தனது சிறந்த ஆடும் லெவனை முன்னாள் வீரர் இயான் பிஷப் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் துபாயில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 58 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 30 போட்டிகள் நிறைவடைந்துவிட்டதால், ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு கடுமையாக போராடி வருகின்றன. அதே போல் மறுபுறம் இந்த தொடரில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தும், எந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் உலகின் முன்னாள் முக்கிய வீரர்களில் ஒருவரான இயான் பிஷப் நடப்பு ஐபிஎல் தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இயான் பிஷப் தேர்வு செய்துள்ள ஆடும் லெவனின் கேப்டனாக கீரன் பொலார்டு நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்களை எல்லாம் தேர்வு செய்துள்ள இயான் பிஷப், ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கோஹ்லி போன்ற சீனியர் வீரர்கள் யாரையும் அணியில் எடுக்கவில்லை.

இயான் பிஷப் தேர்வு செய்துள்ள பேண்டசி அணி;

கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), டூபிளசிஸ், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கீரன் பொலார்டு (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரசீத் கான், முகமது ஷமி, காகிசோ ரபாடா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Mohamed:

This website uses cookies.