ஹர்திக் பாண்டியா இந்தியாவை விட்டு வெளியில் நடக்கும் போட்டிகளிலும் சாதிப்பார் என நம்புவதாக முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.
இந்திய இளம் வீரர் ஹர்திக் பாண்டியா, அணியில் இடம்பெற்றது முதல் அடுத்தடுத்த படிநிலைக்கு முன்னேறி வருகின்றார். அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்துவதால், இந்தியாவுக்கு சிறப்பன ஒரு ஆல்-ரவுண்டர் கிடைத்துள்ளார் என ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் விமர்சகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.
இயான் செப்பல் கூறியதாவது:
பாண்டியாவின் திறமை அவரின் செயல்பாட்டால் நிரூபித்து வருகின்றார். இதை பார்க்கும் போது, கபில் தேவை பார்ப்பது போல உள்ளது. அவரும் பவுலிங் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அசத்தி வந்தார்.
அதே போல அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல், 140 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்வதிலும் பாண்டியா கில்லாடியாக உள்ளார்.
அடுத்து இந்திய அணி செல்லவுள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா நாடுகளுடனான சுற்றுத்தொடர் மிக சவாலாக இருக்கும். இது அணிக்கு மட்டுமல்லாமல் பாண்டியாவுக்குமானதாக இருக்கும். அவர் வெளிநாட்டு மண்ணிலும் சாதிப்பார் என நம்புகின்றேன். என தெரிவித்துள்ளார்.