ஐ.சி.சி.,யின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷாசான்க் மனோகர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றி 2 வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கான தேர்தலில் சஷாங் மனோகர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த இங்கிலாந்தின் கில்ஸ் கிளார்க்கை ((Giles Clarke)) போதுமான நபர்கள் முன்மொழியவில்லை.
இதனையடுத்து சஷாங் மனோகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது . வரும் 2020ம் ஆண்டு வரை சஷாங் மனோகர் இப்பதவியில் நீடிப்பார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை மற்ற உறுப்பினர்களுக்கும் பரவாலாக்கிய நடவடிக்கை சஷாங்கிற்கு ஆதரவை பெற்றுத்தந்துள்ளது.