சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டி – இந்தியா vs பாகிஸ்தான் – போட்டி கணிப்பு

தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் இப்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஜூன் 18ஆம் தேதி சாம்பியன்ஸ் ட்ராபி 2017 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி அன்று உலக முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும். இதனால், உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே, ரசிகர்களுக்கு சந்தோஷம் தான். ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் இப்போது இரண்டாவது வாரத்தில் இரண்டாவது முறை நடைபெற போகிறது.

இரண்டு அணிகளுமே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடுகின்றனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அணிகளுமே ஒரு போட்டி மற்றும் தோற்று, இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் கை ஓங்கி இருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும்.

கண்ணோட்டம்:

இந்தியா :

கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றதால், அடுத்த போட்டிக்கு அணியை மாற்ற தேவையில்லை. அடுத்த போட்டியில் உமேஷ் யாதவ் விளையாடலாம், ஆனால் யாருக்கு பதிலாக விளையாடுவார். இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவை தான் நம்பி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கவில்லை, ஆனால் அவரை இறுதி போட்டியில் விளையாடாமல் இருக்க வைப்பது, இந்திய அணிக்கு தான் பின்னடைவு. இந்த மாதிரி முக்கியமான போட்டிகளில், அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்.

முதல் 3 வீரர்கள் பலம் வாய்ந்தர்வர்களாக இருக்கிறார்கள். இதனால், தோனி, யுவராஜ் போன்ற வீரர்களுக்கு பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்க வில்லை. எதிரணியின் பந்துவீச்சாளர்கள் முதல் 3 வீரர்களை தொடக்கத்திலேயே விக்கெட் எடுக்கவேண்டும், இல்லைன்றால் பிறகு அவர்கள் தொந்தரவு கொடுக்க தொடங்கிவிடுவார்கள்.

பாகிஸ்தான் :

பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு நல்ல தகவல் வந்துள்ளது. அவர்களின் முக்கிய பந்துவீச்சாளரான முகமது அமீர் நாளை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரும்மன் ரயீஸ் சிறப்பாக வீசியதால், ஷடப் கான் அல்லது இமாட் வாசிம் ஆகியோர் அமீருக்கு வழி விடுவார்கள். இதனால், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடும் வாய்ப்பும் இருக்கிறது.

தற்போது, பாகிஸ்தான் அணியில் ஷோயப் மாலிக் மட்டும் தான் பார்மில் இல்லை. அவர் சிறப்பாக விளையாடினால், இந்திய அணியை வெல்ல வாய்ப்பு உள்ளது.

போட்டி கணிப்பு :

தற்போது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கை தான் ஓங்கிருக்கிறது. இதனால், இந்தியா 3வது சாம்பியன்ஸ் டிராபி வெல்ல, விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.