சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இந்த தொடர் ஒருநாள் போட்டியை போல் 50- ஓவர் கொண்ட போட்டி ஆகும். இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியை 11 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக மஷ்ரபே மொர்டாசா செயல்பட உள்ளார்.
வங்கதேசம் அணி A பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் இருக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டி இங்கிலாந்தும் வங்கதேசமும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கு முன்பாக வங்கதேச கிரிக்கெட் அணி அயர்லாந்து செல்கிறது. அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் கலந்துகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.
சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான வங்கதேச அணி:
மஷ்ரபே மொர்டாசா (C), தமிம் இக்பால், சௌம்யா சர்க்கார், இம்ருல் கெய்ஸ், முஷபிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொஸடெக் உசேன், மெஹதி ஹசன், சுன்சமுல் இஸ்லாம், முஷ்டபிஸுர் ரகுமான், டஸ்கின் அஹ்மத், ருபெல் உசேன், ஷபியுல் இஸ்லாம், நசீர் உசேன், நருள் ஹசன், சுபாஷிஸ் ராய், முகமது சைபுதின்.