India's MS Dhoni arriving before the ICC Cricket World Cup group stage match at Trent Bridge, Nottingham. (Photo by Simon Cooper/PA Images via Getty Images)

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு தமிழகத்தில் கிரிக்கெட் மக்களோடு ஒன்றிணைந்துவிட்டது. தமிழகத்தின் சிறு சிறு கிராமங்களில் கூட கிரிக்கெட் விளையாட்டு மிகப் பிரபலம்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில், மற்ற அணிகளைக் காட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழகத்தில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் கொண்டாடப்பட்டது. சென்னை அணியில் விளையாடும் வீரர்கள் மீது தமிழ் மக்கள் காட்டும் அன்பிற்கு அளவில்லை. தமிழ் மக்கள் அன்பினால் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தமிழில் ட்வீட் போட ஆரம்பித்தனர் என்பது மிக முக்கியமான விஷயம்.

தமிழை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஐசிசி!! ஹிந்திக்கு செம்ம நோஸ்கட்!! 1
தற்போது இங்கிலாந்தில் 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

 

 

 

 

போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து – நியூசிலாந்து அணி கேப்டன்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீடியோக்களை சில மொழிகளில் சப் டைட்டில் கொடுத்து வெளியிட்டுள்ளது ஐ.சி.சி.

அதன்படி இரு அணி கேப்டன்கள் பேசும் வீடியோக்களுக்கு தமிழ் மொழியில் சப் டைட்டில் கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது ஐ.சி.சி நிர்வாகம்.

இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது. இது தமிழ் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.சி.சி வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியில் சப் டைட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் தமிழரான  கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சை இந்தியா – இங்கிலாந்து போட்டியை காண நேரில் வந்துள்ளார். இது தொடர்பான நிழற்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில். “இன்றைய போட்டியில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மற்றும் சச்சின் ஆகிய இருவரும் ஒன்றாக மைதானத்தில் இருந்தனர்” எனப் பதிவிட்டுள்ளது.

தமிழை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஐசிசி!! ஹிந்திக்கு செம்ம நோஸ்கட்!! 2
Google’s Indian-American CEO Sundar Pichai has predicted that India and England would clash in the finals of the ICC Cricket World Cup 2019 and said he was “rooting” for the men in blue to emerge victorious.

 

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் பிச்சை, “இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய இளம் வயதில் நான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அப்போது நான் சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை எனது முன்னுதாரணமாக கொண்டிருந்தேன்” எனக் கூறியிருந்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *