Pakistani cricketer Umar Akmal flashes the victory sign from on board the team coach in Lahore on January 20, 2015 before the team's departure for New Zealand. The Pakistan cricket team left on a World Cup mission Tuesday with their first destination New Zealand where they play two one-day internationals before taking part in the mega event. AFP PHOTO / Arif ALI (Photo credit should read Arif Ali/AFP/Getty Images)

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் வீரர் உமர் அக்மல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 2 பந்துகளை விடுவதற்கு 2 லட்சம் டாலர்கள் தர என்னை ஒருவர் அழைத்தார் எனவும் குற்றச்சாட்டை வைத்தார் இந்த குற்றச்சாட்டின்படி தற்போது ஐசிசி விசாரணையை துவக்கியுள்ளது

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மல். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம். தற்போது உடற்தகுதி பிரச்சனையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருக்கிறது சமீபத்தில் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது இரண்டு பந்தை லீவ் செய்வதற்கு இரண்டு லட்சம் டாலர் பணம் தருவதாக தன்னை அணுகிறார்கள் என்ற வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

உமர் அக்மல் வைத்த குற்றச்சாட்டின் மீது விசாரனையை துவக்கியது ஐசிசி! 1
India’s players celebrate the dismissal of Pakistan’s batsman Umar Akmal (R) during the Pool B 2015 Cricket World Cup match between India and Pakistan 

மேலும், இதுகுறித்து அக்மல் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஒவ்வொரு போட்டியில் சூதாட்டக்காரர்கள் என்னை அணுகிறார்கள். பெரும்பாலும் ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின்போது இந்த சம்பவங்கள் நடைபெற்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்தது. இதில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் உமர் அக்மல் நான்கு பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். இந்த தொடரின்போதுதான் தன்னை அணுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டிவிக்கு அவர் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பந்துகளை லீவ் செய்தற்காக என்னை அணுகிறார்கள். அதற்காக இரண்டு லட்சம் டாலர் தருவதாக கூறினார்கள்.உமர் அக்மல் வைத்த குற்றச்சாட்டின் மீது விசாரனையை துவக்கியது ஐசிசி! 2

உலகக்கோப்பையில் இது எங்களுடைய முதல் போட்டி. இந்தியாவிற்கு எதிராக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னை அணுகிறார்கள். ஆனால், நான் அவர்களிடம், நான் மிகவும் கண்டிப்பானவன், பாகிஸ்தானுக்காக விளையாடும்போது, இதுகுறித்து என்னிடம் மீண்டும் பேசக்கூடாது என்றேன்’’ என்று கூறியுள்ளார்.

இவரது பேட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு பிரிவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உமர் அக்மலுக்கு சம்மன் வழங்கியுள்ளது.

மேலும்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பாபர் அஸாம் (Babar Azam). 23 வயதே நிரம்பியிருக்கும் இந்த இளைஞரைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. 2015-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியொன்றில் அறிமுக வீரராக களமிறங்கிய பாபர் அஸாம், மூன்றே ஆண்டுகளில் பலதரப்பட்ட சாதனைகளுக்கு உரியவராக உயர்ந்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பாபர் தற்போது வகித்து வரும் இடம் – இரண்டு. முதல் இடத்தை பிடித்திருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்ததாக, தரவரிசை பட்டியலில் பாபர் அஸாம் நிலைகொண்டிருக்கிறார்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *