ஒருநாள் போட்டிகளில் வருடத்தின் சிறந்த வீரர் விருதுணை பெற்றார் விராட் கோலி!!
கடந்த 2017ஆம் ஆண்டு விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அசட்டையாக ஆடிய பல சாதனைகளை புரிந்தார். அதற்காக 2017ன் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதினை அளித்துள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் முறையாக சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதினை பெற்றார் விராட் கோலி. தற்போது இந்த விருதினை இரண்டாவது முறையாக பெறுகிறார் விராட்.

கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் 6 சதங்களை விளாசி தள்ளியுள்ளார் விராட். சென்ற வருடம் மட்டுமே மொத்தம் 26 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளா விராட் கோலி 1469 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 76.84 ஆகும். இதன் ஸ்ட்ரைக் ரேட் 99.11 ஆகும். மொத்தம் 6 சதங்களும் 7 அரசிய சதங்களும் அடித்துள்ளார் விராட்.

போட்டி – 26
நாட் அவுட் – 7
ரன் – 1460
சராசரி – 76.84
அதிகபட்சம் – 131
ஸ்ட்ரைக் ரேட் – 99.11
சதம் – 6
அரை சதம் – 7
ஃபோர்.- 136
சிக்சர் – 22
இந்த விருதினை பெற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரசிட் கான் ஆகியோர் விராட் கோலிக்கு போட்டியாக இருந்தனர். இறுதியில் விராட் கோலி இந்த விருதினை வென்றுவிட்டார்.