நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியப் பந்துவீச்சாளர் பும்ரா இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் அதிர்ச்சியளித்த பும்ரா, தொடருக்கு முன்பு பந்துவீச்சாளருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் 3 ஆட்டங்களில் விளையாடியும் ஒரு விக்கெட்டும் எடுக்காததால் 45 புள்ளிகளை இழந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளார்.
பும்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து இந்தத் தொடருக்கு முன்பு வரை குறைந்தது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தாமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தத் தொடரில் பும்ரா மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தார்.

நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட், இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. 2-ம் இடத்தில் பும்ராவும் 13-ம் இடத்தில் சஹாலும் உள்ளார்கள்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி, முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஒருநாள் தொடரில் பங்கேற்காத ரோஹித் சர்மா, 2-ம் இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி
1)கோலி – 869 புள்ளிகள்
2)ரோகித் – 855
3)பாபர் – 829
4)டெய்லர் – 828
5)டூப்ளெசிஸ் – 803
6)வார்னர் – 796
7)டி காக் – 782
8)கானே வில்லியம்சன் – 773
9)ஜோ ரூட் – 770
10)ஃபின்ச் – 769
இந்தியா – நியூஸிலாந்துக்கிடையேயான ஒருநாள் தொடரில் அதிரடி காட்டியதன் மூலம், 5வது இடத்திலிருந்த டெய்லர் 4வது இடத்திற்கு முன்னேறினார்.

ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
1)போல்ட் – 727 புள்ளிகள்
2)பும்ரா – 719
3)முஜீப் – 701
4)ரபடா – 674
5)கம்மின்ஸ் – 673
6)வோக்ஸ் – 659
7)அமீர் – 656
8)ஸ்டார்க் – 645
9)ஹென்றி – 643
10) ஃபெர்குசன் – 638
இந்தியா நியூஸிலாந்துக்கிடையேயான தொடரில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்ததால் 45 புள்ளிகளை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் பும்ரா. பந்து வீச்சுப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய வீரரும் பும்ரா தான்.