தரமான மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்..? டி.20 உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் பிராட் ஹாக் !!

தரமான மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்..? டி.20 உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் பிராட் ஹாக்

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகள் கூட தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்த இந்த தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த ஒரு வாரம் ஆகிவிட்டாலும், இந்த தொடர் குறித்தான விவாதங்கள் இன்னும் குறைந்த பாடு இல்லை. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் ஒரு சிலர் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது சிறந்த ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக்கும், நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அவரது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பையை வென்று கொடுத்த இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லரை தனது அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், துவக்க வீரராகவும் பட்லரை தேர்வு செய்துள்ளார். மற்றொரு துவக்க வீரராக இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸை தேர்வு செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் ஷாதப் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் மிட்செல் சாட்னர், சாம் கர்ரான், ஷாகின் அப்ரிடி மற்றும் தென் ஆப்ரிக்கா அணியின் அன்ரிச் நோர்கியா ஆகியோரை பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார்.

பிராட் ஹாக் தேர்வு செய்த ஆடும் லெவன்;

ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, ஷாதப் கான், மிட்செல் சாட்னர், சாம் கர்ரான், ஷாஹின் அப்ரிடி, அன்ரிச் நோர்கியா.

Mohamed:

This website uses cookies.