ஐசிசி லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு 1
(Photo Source: Getty Images)

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வென்றது. கேப்டவுன் நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன.
தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு சுருண்டது. ஷமி, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியினரின் அனல்
வேகப்பந்துவீச்சில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஷ்வின் 37 ரன்கள் எடுத்தார். பிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஐசிசி லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு 2

இந்த போட்டியில் பெரிதாக ஏதும் ரன் அடிக்காத இந்திய அணி கேப்டம் விராட் கோலி பேட்ஸ்மேன்ஸ்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும், 4ஆவது இடத்தில் இருந்து இந்திய அணி பேட்ஸ்மேன் செத்தேஸ்வர் புஜாரா 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார் இதனால் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு தற்போது 22 வயது ஆகிறது. அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்து 9 விக்கெட் வீழ்த்திய வெரோன் பிலாண்டர் 12ஆவது இடத்தில் இருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ஆல் ரவுண்டர் தகர வரிசை பட்டியலிளும் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார் பிலாண்டர்

அணிகளின் டெஸ்ட் தர வரிசைப் பட்டியல் :

  1. இந்தியா
  2. தென்னாப்பிரிக்கா
  3. ஆஸ்திரேலியா
  4. நியூசிலாந்து
  5. இங்கிலாந்து
  6. இலங்கை
  7.  பாகிஸ்தான்
  8. வெஸ்ட் இண்டீஸ்
  9. வங்காள தேசம்
  10. ஜிம்பாப்வே

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்

  1. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி)
  2. ஜோ ரூட் (இங்கிலாந்து)
  3. விராட் கோலி ( இந்தியா)
  4. கேன் வில்லியம்சன் (நியூஸி)
  5. புஜாரா (இந்தியா
  6. டேவிட் வார்னர் (ஆஸி)
  7. அசார் அலி (பாகிஸ்தான்)
  8. சண்டிமால் (இலங்கை)
  9. அலைஸ்டர் குக் (இங்கிலாந்து)
  10. ஹசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா)

 

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் :

  1. ககிசோ ரபடா (தென்னாப்பிரிக்கா)
  2. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கி)
  3. ரவிந்தர ஜடேஜா(இந்தியா)
  4. ரவி அஷ்வின் (இந்தியா)
  5. ஜோஷ் ஹேசல்வுட்(ஆஸி)
  6. வெரோன் பிலாண்டர் (தென்னாப்பிரிக்கா)
  7. ரங்கனா ஹெராத்(இலங்கை)
  8.  நெய்ல் வேக்னர்(நியூசி)
  9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸி)
  10. நெதன் லைன் (ஆஸி)

 

டெஸ்ட் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தர வரிசைப் பட்டியல்:

  1. சகிப் அல் ஹசன்(வங்க.தே)
  2. ரவிந்த்ர ஜடேஜா(இந்தியா)
  3. ரவி அஸ்வின் (இந்தியா)
  4. பென் ஸ்டோக்ஸ்(இங்கி)
  5. வெரோன் பிலாண்டர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *