இன்று நடந்த ஐ.சி.சி சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை அள்ளினார் விராட் கோலி. அதுபோக இன்று அறிவிக்கப்பட்ட ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் விராட்.
மேலும், ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு பின்னர் 900 புள்ளிகளை பெற்ற முதல் இந்திய வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகிய சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் கூட செய்யாத சாதனைகளை செய்துள்ளார் விராட் கோலி.
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 900 புள்ளிகளை பெற்றுள்ளார் விராட் கோலி.
900 புள்ளிகளை அடைந்த 31-வது டெஸ்ட் வீரர் கோலி. இதுவரை டெஸ்ட் தரவரிசையில் அதிகப் புள்ளிகள் பெற்றவர் பிராட்மேன். அவர் எடுத்த 961 புள்ளிகளை இதுவரை யாராலும் நெருங்கமுடியவில்லை. சமீபத்தில் ஆஸி. கேப்டன் 947 புள்ளிகள் பெற்றார்.
செஞ்சுரியன் டெஸ்ட் சதம் மூலம் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார் கோலி. முதல் இடத்தில் ஸ்மித் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்தமுறை முதலிடத்தில் இருந்த ரபடா இரண்டாவது இடத்துக்கு இறங்கியுள்ளார். 3-வது ஜடேஜாவும் ஐந்தாவது இடத்தில் அஸ்வினும் உள்ளார்கள்.
அணிகளின் டெஸ்ட் தர வரிசைப் பட்டியல் :
- இந்தியா
- தென்னாப்பிரிக்கா
- ஆஸ்திரேலியா
- நியூசிலாந்து
- இங்கிலாந்து
- இலங்கை
- பாகிஸ்தான்
- வெஸ்ட் இண்டீஸ்
- வங்காள தேசம்
- ஜிம்பாப்வே
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்
- ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி)
- விராட் கோலி ( இந்தியா)
- ஜோ ரூட் (இங்கிலாந்து)
- கேன் வில்லியம்சன் (நியூஸி)
- டேவிட் வார்னர் (ஆஸி)
- புஜாரா (இந்தியா
- அசார் அலி (பாகிஸ்தான்)
- ஹசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா)
- சண்டிமால் (இலங்கை)
- டீன் எல்கேர் (தென்னாப்பிரிக்கா)
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் :
- ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கி)
- ககிசோ ரபடா (தென்னாப்பிரிக்கா)
- ரவிந்தர ஜடேஜா(இந்தியா)
- ஜோஷ் ஹேசல்வுட்(ஆஸி)
- ரவி அஷ்வின் (இந்தியா)
- ரங்கனா ஹெராத்(இலங்கை)
- வேரோன் பிலாண்டர்
- நெய்ல் வேக்னர்(நியூசி)
- மிட்செல் ஸ்டார்க் (ஆஸி)
- நெதன் லைன் (ஆஸி)
டெஸ்ட் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தர வரிசைப் பட்டியல்:
- சகிப் அல் ஹசன்(வங்க.தே)
- ரவிந்த்ர ஜடேஜா(இந்தியா)
- ரவி அஸ்வின் (இந்தியா)
- பென் ஸ்டோக்ஸ்(இங்கி)
- வெரோன் பிலாண்டர்