பேசுறவன் பேசட்டும்… ஆனா என்ன நடக்குதுனு பாக்க தான போறீங்க; சரியான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா !!

பேசுறவன் பேசட்டும்… ஆனா என்ன நடக்குதுனு பாக்க தான போறீங்க; சரியான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசி வரும் முன்னாள் வீரர்களுக்கு ரோஹித் சர்மா பதில் கொடுத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் 7ம் தேதி துவங்க உள்ளது.

இறுதி போட்டியில், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்கான தரவரிசையில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்சிப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காக காத்திருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து பேசும் முன்னாள் வீரர்கள் பலர், ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பேசி வரும் நிலையில், இதற்கு ரோஹித் சர்மா தற்போது பதில் கொடுத்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்திய அணிக்காக ஒன்று அல்லது இரண்டு சாம்பியன் கோப்பைகளை வென்று கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்சிப்பை வென்று கொடுக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறோம், சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு எங்களால் முடிந்தவரை போராடுவோம். வெற்றிக்காக எங்களால் முடிந்தவரை போராடுவோமே தவிர, வேறு எதை பற்றியும் பெரிதாக யோசித்து எங்களுக்கு நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ள மாட்டோம். அடுத்த ஐந்து தினங்கள் எங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கு போகிறது என்பது மட்டுமே உண்மை. எங்களை விட ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு என பலரும் பேசி வருகின்றனர், ஆனால் அதை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, அதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ள போவதும் இல்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு எந்த அணி செயல்படுகிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது மட்டுமே எனது கருத்து, வெளியில் இருந்து பேசுவதால் எதுவும் இங்கு மாறிவிடாது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.