36 வயதில் ஆஷிஷ் நெஹ்ரா கம்பேக் கொடுக்கிறார்..!! யுவ்ராஜால் ஏன் முடியாது..? -சேவாக்
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் யுவ்ராஜ சிங்கிற்கு முன்னாள் ஆதிறது வீரரவிரிந்தர் சேவாக் ஆதரவு அளித்து உக்கப்படுத்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கடைசியாக சென்ற வரடம் நடத்த சாம்பியன்ஸ் கோப்பையில் களம் இறங்கினார். அதன் பின்னர் உடல் தகுதி தேர்வான யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்ததால் அதற்கு அடுத்த நடந்த இரு தொடரில் கூட யுவராஜ் சிங்கின் பெயர் வரவில்லை.

அதற்காக மீண்டும் கடுமையாக உழைத்து யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தார். தற்போது ஜோனால் டி20 லீக்கில் ஒரு சில போட்டிகளில் நன்றாக ஆடியுள்ளார் இதனால் அணியில் மீண்டும் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் பேசியதாவது,
யுவராஜ் சிங் அணிக்கு திரும்புவது தேர்வுக்குழுவை பொறுத்தது. நன்றாக ஆடி, யோ-யோகா தேர்வை கிளியர் செய்தால் ஏன் அணிக்கு திரும்ப முடியாது.? 36 வயதில் ஆஷிஷ் நெஹ்ரா அணிக்கு திரும்பும் போது யுவராஜ் சிங்கால் ஏன் மீண்டும் வர முடியாது.
எனக் கூறினார்.