இனி கிரிக்கெட் போட்டிகளை இப்படித்தான் நடத்த வேண்டும்: புதிய யோசனை சொன்ன பென் ஸ்டோக்ஸ் 1

கொரோனா வைரஸ் தொற்றை எளிதில் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டியை நடத்தலாம் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த உடன் போட்டிகளை மீண்டும் தொடங்கலாம் என ஒவ்வொரு நாடுகளும் நினைத்துக் கொண்டிருந்தன.

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் ஒழிக்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் இறந்த போதிலும், மறுபக்கம் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.இனி கிரிக்கெட் போட்டிகளை இப்படித்தான் நடத்த வேண்டும்: புதிய யோசனை சொன்ன பென் ஸ்டோக்ஸ் 2

ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் போட்டிகளை நடத்த கால்பந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளையும இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வெறிச்சோடிய மைதானத்தில் போட்டிகளை நடத்தினாலும் சரியானதாகத்தான் இருக்கும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். நம்முடைய நாட்டிற்காக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறோம். ஆகவே, ரசிகர்களுக்கு முன் விளையாடினாலும் சரி, ரசிகர்கள் இல்லாவிடிலும் சரி. போட்டி இதன் அடிப்படையில்தான் செல்லும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.

இனி கிரிக்கெட் போட்டிகளை இப்படித்தான் நடத்த வேண்டும்: புதிய யோசனை சொன்ன பென் ஸ்டோக்ஸ் 3
ABU DHABI, UNITED ARAB EMIRATES – DECEMBER 07: Ajaz Patel of New Zealand celebrates with team mates after dismissing Imam-ul-Haq of Pakistan during day five of The Third Test match between New Zealand and Pakistan at Zayed Cricket Stadium on December 7, 2018 in Abu Dhabi, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)
இந்த நிலையில், இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 89 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,694ல் இருந்து 1,783 ஆக உயர்வடைந்து உள்ளது.  15 ஆயிரத்து 266 பேர் குணமடைந்தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391ல் இருந்து 52 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *