முடியவில்லை என்றால் தென்னாப்பிரிக்காவில் ட்ராவிற்காக ஆடியிருக்க வேண்டும் : தோனி 1

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி என்ன செய்திருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கூறினார்.

சென்னை வந்துள்ள எம்.எஸ்.தோனி, செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது அவரிடம் தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு பற்றி கேட்கப்பட்டது. அனுபவ வீரராக என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.முடியவில்லை என்றால் தென்னாப்பிரிக்காவில் ட்ராவிற்காக ஆடியிருக்க வேண்டும் : தோனி 2

அப்போது, ‘தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் நிலைக்கு பதில் சொல்வதாக இதை கருதவேண்டாம்.  பொதுவாக, டெஸ்ட் போட்டியில் ஒரு அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அது கடினம் என்று தெரிந்தால் டிராவை நோக்கி செல்லவேண்டும். டிராவை நோக்கி செல்ல என்ன செய்ய வேண்டும் என்றால், ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்து, ரன்களை அதிகமாக எடுக்க வேண்டும். இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாட்டில் விளையாடினாலும் சரி, இதுதான் முறை’ என்றார் தோனி. 

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது. சென்னை அணி மீதுள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவே நமக்கான பலம். அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உண்டு”, என கூறினார்.முடியவில்லை என்றால் தென்னாப்பிரிக்காவில் ட்ராவிற்காக ஆடியிருக்க வேண்டும் : தோனி 3

மேலும், ”இரண்டு ஆண்டுகள் சென்னை அணி ஆடாவிட்டாலும், ரசிகர்களின் ஆதரவு கூடத்தான் செய்திருக்கிறது. சென்னை அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடாதது வருத்தம் அளித்தாலும், நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது. விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழிநடத்த உதவும். 18 முதல் 20 வீரர்களை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அஸ்வினை அணியில் சேர்க்க முயல்வோம்”, எனவும் தோனி தெரிவித்தார். தோனி, நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்தித்து பேச உள்ளார்.

சென்னை தனக்கு இரண்டாவது வீடு எனவும் தோனி குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *