மோசமாக விளையாடினால் கேள்வி கேக்கதான் செய்வோம், அது யார இருந்தாலும் சரி..; ரோஹித் சர்மாவை கடுமையாக விமர்சித்த கபில் தேவ் !!

யாராக இருந்தாலும் மோசமாக விளையாடினால் கேள்விகள் எழத்தான் செய்யும் என்று ரோகித்சர்மா குறித்து கபில்தேவ் பேசியுள்ளார்.

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் மூன்று விதமான தொடரின் கேப்டனாகவும் பொறுப்பேற்ற ரோகித் சர்மா கடந்த சில காலங்களாகவே பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்திய அணியை பலமுறை ஒற்றையாலாக தனித்து நின்று வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் சென்ற ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தினாறினார்.

இதனால் இவருக்கு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. ஓய்வில் இருந்து மீண்டு வந்து தன்னுடைய இயல்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெறும் 25 ரன்கள் எடுத்த நிலையில் தன்னுடைய விக்கெட்டை இழந்துள்ளார்.

 

 

இதற்குமுன் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மாவிடம் தற்பொழுது அந்த ஆட்டத்தை பார்க்க முடியவில்லை.

இதன் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில் ரோஹித் சர்மாவின் பார்ம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் ரோகித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரும் விமர்சனத்திற்கு உள்ளானவர்தான் என்று வெளிப்படையாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இதுகுறித்து கபில் தேவ் பேசுகையில், “எப்பொழுது எந்த வீரர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்பதை தேர்வாளர்களை தவிர்த்து மற்ற யாரும் தெரிந்து கொள்வது கஷ்டம் தான், ரோகித் சர்மா புத்திசாலியான ஒரு வீரர் , அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் 14 போட்டிகளில் பங்கேற்று ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் கேள்வி எழத்தான் செய்யும், காரி சோபர், டான் பிராட்மண்ட், விராட் கோலி,சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், வீவ் ரிச்சர்ட்ஸ் போன்ற யாராக இருந்தாலும் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி எழத்தான் செய்யும், இந்த கேள்விக்கு தற்பொழுது ரோஹித் சர்மா மட்டும்தான் பதில் கூற முடியும், அவர் போதுமான கிரிக்கெட் விளையாடி விட்டார் என்று நினைக்கிறாரா…? அல்லது ரசித்து விளையாடுவதை விட்டு விட்டாரா..? என்று ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டத்தை கபில் தேவ் விமர்சித்துள்ளார்.

 

இந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக ரோகித்சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.