தனிப்பட்ட சாதனைகளுக்காக நான் விளையாடுவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.
இந்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கையுடனான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து டேவிட் மில்லரின் உலக சாதனையை சமன் செய்தார் ரோஹித் சர்மா. ஒரு நாள் போட்டிகளில் 3 இரட்டைச் சதங்களையும், சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதங்களையும் எடுத்துள்ள ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
வெற்றிக்குப் பின்னர் நிருபர்களிடம் ரோஹித் பேசினார். அவர் கூறும்போது, “கிரிக்கெட்டில் நான் எந்த இடத்தில் பலம் மிகுந்தவன். எந்த இடத்தில் நான் பலம் குறைந்தவன் என்பது எனக்குத் தெரியும்.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 போட்டி என அனைத்து விதமான போட்டிகளிலும் இதுபோன்று விளையாடவே விரும்புகிறேன். மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரன்களைச் சேர்க்கவேண்டும். அதுதான் எனது பலம்.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
முச்சதம், இரட்டை சதம், சதமடிப்பதைப் பற்றி நான் நினைக்கவில்லை. இந்திய அணி வெற்றி பெறவேண்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன். தனிப்பட்ட சாதனைகளுக்காக நான் விளையாடுவதில்லை ” என்றார். – பிடிஐ