இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இன்று இரவு நடக்கும் முதல் டி20 போட்டியில் வெல்ல இந்தியாவிற்கே வாய்ப்புகள் அதிகம் என முன்னாள் இந்திய வீரர் ஜாம்வான விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
அதிலும் இந்திய வெல்வதற்கு 95% வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார் சேவாக்.

பொதுவாக இதுபோன்ற நீண்ட நாள் தொடரில் டெஸ்ட் போட்டிகள் தான் முதலில் தொடங்கும். ஆனால் இம்முறை சற்று நேர்மாராக டி20 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி மான்சஸ்டர் நகிரில் செவ்வாய்க்கிழமை (இன்று) இரவு இந்திய நேரப்படி 10 மணியளவில் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது என தெரிகிறது.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை அடைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு 17 ரன்களும், ரோஹித் சர்மாவுக்கு 51 ரன்களும் தேவைப்படுகிறது.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
இதுவரை இவ்விரு அணிகள் 11 டி20 போட்டியில் மோதியுள்ளது, அதில் இந்தியா அணி 5 இல் வெற்றியும் இங்கிலாந்து அணி 6 இல் வெற்றியும் பெற்றுள்ளது.