நான் என்ன பண்ண முடியும்…? சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்காததற்கு இது தான் காரணம்; ஷிகர் தவான் சொல்கிறார் !!

நான் என்ன பண்ண முடியும்…? சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்காததற்கு இது தான் காரணம்; ஷிகர் தவான் சொல்கிறார்

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான காரணத்தை இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு கொண்டே இருந்ததால் போட்டியின் ஓவர் தலா 29ஆக குறைக்கப்பட்டது. இதன்பின்பும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி பாதியிலேயே முடித்து கொள்ளப்பட்டது.

இந்த போட்டி முழுவதுமாக நடைபெறாமல் இருந்தாலும், இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து காரணமே இல்லாமல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

கடந்த போட்டியில் மட்டுமல்லாமல், தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து சரியாகவே செய்து கொடுத்து வரும் சஞ்சு சாம்சனிற்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் அவரை தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன் என முன்னாள் வீரர்கள் பலரே ஓபனாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் காரணமே இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாததற்கான காரணத்தை இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவானே வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஷிகர் தவான் பேசுகையில், “இந்த போட்டியில் நாங்கள் 6 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதே சரியாக இருக்கும் என நினைத்தோம், இதன் காரணமாகவே சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். அதே போல் தீபக் சாஹர் பந்தை இலகுவாக ஸ்விங் செய்யக்கூடியவர் என்பதால் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுத்தோம்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.