விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் கால் துசிக்கு கூட சமமாக மாட்டார் ; முன்னாள் வீரர் சொல்கிறார்..
விராட் கோலியை விட சச்சின் டெண்டுல்கரே தலைசிறந்த வீரர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என கருதப்படும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இதுவரை சர்வதேச அளவில் 76 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கர்க்கு பிறகு மிகப் பெரிய சாதனை ஒன்றை படைக்த்துள்ளார்.
இன்னும் கூடிய விரைவில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 100 சதங்களையும் அடித்து விடுவார் என்பதால் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் யார் சிறந்தவர் என்ற விவாதம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.,விராட் கோலியை விட சச்சின் டெண்டுல்கர் மிகச் திறமையானவர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் ஜாஃபர் தெரிவித்ததாவது., “சச்சின் டெண்டுல்கர் தனித்துவமானவர் திறமையை ஓரம் கட்டி விட்டு பார்த்தால் அவர் மிகவும் கடுமையான உழைக்க கூடியவர் அவருடன் ஒப்பிடுகையில் விராட் கோலி அந்த அளவிற்கு திறமையானவர் என நினைக்கவில்லை. விராட் கோலியை முதன் முதலில் 19-வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் பார்க்கும் பொழுது அவருடைய பேட்டிங்கில் பல குறைபாடுகள் இருந்தது. அவர் இளம் வீரர் மேலும் அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடக் கூடியவர். ஆனால் அவர் தன்னுடைய பேட்டிங்கை இன்னும் சிறப்பாகவும் மாற்ற முயற்சி செய்தார் மேலும் அவருக்கு அதற்கான தன்னம்பிக்கை இருந்தது”.
“விராட் கோலியின் பேட்டிகளில் பல தவறுகள் இருந்தது, அதை அவர் புரிந்து கொண்டு கடந்த இரண்டு வருடங்களில் அதை மாற்றி உள்ளார்.இது அவரின் கடின உழைப்பை காட்டுகிறது, அவர் சிறப்பாக விளையாடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தார். இதையெல்லாம் தவிர்த்து விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார் என நினைக்கிறேன்.
ஆனால் இவரை விட சச்சின் வித்தியாசமானவர், அதை விராட் கோலியே ஒப்புக்கொள்வார். சர்வதேச கிரிக்கெட்டில் 15 வயதில் காலடி வைத்து வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை சமாளித்து மேலும் தன்னுடைய 24 வயதில் 30 ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார். அவருடைய தரமே வேறு. ஆனால் விராட் கோலி சமகால கிரிக்கட்டின் தலைசிறந்த வீரர் என்பதை மறுக்க முடியாது” என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.