என்னுடையே ஒரே இலக்கு இது மட்டும் தான்… இதுக்காக என்ன வேணாலும் செய்வேன்; விராட் கோலி ஓபன் டாக் !!

என்ன விலை கொடுத்தாவது இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை நேற்று கோலாகலமாக நடைபெற்றது, இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின, இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை மிக எளிதாக மண்ணை கவ்வவைத்தது.

இந்தநிலையில், இன்று நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் காரணமாக பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்காக இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்த முறை திருப்பி அடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்களும் அதிக நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.

அதே போன்று மோசமான பார்ம் காரணமாக கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் விராட் கோலி இந்த போட்டியில் எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.

இந்தநிலையில் விராட் கோலி தன்னம்பிக்கையுடன் பேசும் வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அது விராட் கோலி பேசியதாவது, “நான் ஒவ்வொரு நாளும் எழுந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம் என்று என்னும் சாதாரண ஒரு நபர் தான், ஆனால் அந்த நாளில் என்னுடைய முழு கவனத்தையும் உழைப்பையும் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன், அப்படித்தான் நான் எப்பொழுதும் உள்ளேன். மக்கள் என்னிடம் எப்படி மைதானத்தில் இதை செய்கிறீர்கள்.? எப்படி அவ்வளவு நெருக்கடியை சமாளிக்கிறீர்கள்.? என்று கேட்கின்றனர். நான் அவர்களிடம் சாதாரணமாக சொல்வது, நான் விளையாட்டை அதிகம் நேசிக்கிறேன், மேலும் ஒவ்வொரு பந்தும் ரசித்து விளையாடுகிறேன் மேலும் என்னுடைய ஒட்டுமொத்த சக்தியையும் களத்தில் அர்ப்பணிக்கிறேன், சுத்தி என்னை மக்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதால் எனக்கு பதட்டமாவது கிடையாது, இதை எப்படி செய்கிறீர்கள் என்று என்னிடம் அணியில் உள்ளவர்கள் உட்பட அனைவரும் கேட்கின்றனர். அதற்கு என்னுடைய பதில், எவ்வளவுவிலை கொடுத்தாவது என்னுடைய அணிக்கு வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்று நான் களத்தில் செயல்படுவேன், இது போன்ற முன்னேற்பாடுகளோடு தான் நான் விளையாட விரும்புவேன். இது இயற்கையாக வந்தது கிடையாது, நான் அதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று விராட் கோலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.