கடந்த முறை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இருதரப்பில் இலங்கையில் விளையாடியதற்கு பிறகு இந்தியா – இலங்கை இருதரப்பு தொடர் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த முறை இந்தியா – இலங்கை அணிகள் இருதரப்பு தொடரில் விளையாடிய போது இலங்கை அணியை இந்திய அணி பந்தாடியது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர் என எல்லா தொடர்களிலும் இலங்கை அணியை வைட்வாஷ் செய்து அந்த சுற்றுப்பயணத்தை 9-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது.
ஆனால் அதே நிலைமையில் இலங்கை அணி தற்போது இல்லை. பலம் வாய்ந்த இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டியை சமன் செய்துள்ளது இலங்கை அணி. முதல் டெஸ்ட் போட்டியில் மழை அடிக்கடி குறிக்கிட்டதால், முதல் இரண்டு நாட்கள் வேஸ்ட் ஆனது, இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் நேரத்தை வீணடித்து போராடி சமன் செய்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணியுடன் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் சில முக்கிய இன்னிங்ஸ் விளையாடியதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தார்கள்.
ஆனால், இந்த தொடர் இன்னும் முடியவில்லை. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத தயாராக உள்ளது. முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரில் தோல்வியை கண்ட இலங்கை அணி, ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்த, இலங்கையில் இருந்து ஒன்பது வீரர்களை வரவைத்துள்ளது இலங்கை அணி.
இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் திசாரா பெரேரா இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்படுவார். டெஸ்ட் தொடரின் போது சதம் விளாசி அசத்திய தினேஷ் சண்டிமாலுக்கு, ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால், அவர் மீண்டும் இலங்கைக்கே சென்றுவிட்டார். ஆனால், உபுல் தரங்கா, தனுஷ்கா குணாதிலகா, குஷால் பெரேரா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். சாம்பியன்ஸ் ட்ரை 2017 தொடரில் குணாதிலகாவின் சிறப்பாகனை செயல்பட்டால் இந்திய அணி தோல்வி பெற்றது. டெஸ்ட் தொடரின் போது டிக்வெல்லாவும் சிறந்த பார்மில் இருந்தார்.
இன்னொரு பக்கம் சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, எந்த அணியினாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியவில்லை. கடைசியாக இந்திய அணி 2015ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி பெற்றது, அதன் பிறகு எதிரணிகளை பந்தாடுகிறது இந்தியா. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கடைசியாக இலங்கை அணியுடன் இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடிய போது, இலங்கையில் வைத்தே 5-0 என்று இலங்கையின் கதையை முடித்தது இந்திய அணி. ஆனால் இந்த முறை விராட் கோலி இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. விராட் கோலிக்கு பதிலாக நட்சத்திர தொடக்கவீரர் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல் படுவார்.
முதல் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?
இரண்டு அணிகளும் ஒப்பிடும் போது இந்திய அணி வலுவாக இருப்பதால் இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியை அசால்ட்டாக வெல்லும். இரு அணிகளும் கடந்த 10 போட்டிகளில் சந்தித்த போது, இந்திய அணி 9 வெற்றியும் இலங்கை அணி 1 வெற்றியும் பெற்றுள்ளது.