கண்டிப்பா சரிப்பட்டு வர மாட்டார்… ஹர்திக் பாண்டியா சிறப்பான கேப்டன் என்பதற்கான மூன்று காரணங்கள்
டி20 தொடருக்கான கேப்டனாக செயல்படுவதற்கு ஹர்திக் பாண்டியா சரியான தேர்வு கிடையாது என்பதற்கான 3 காரணங்கள்.
நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டைட்டில் பட்டத்தை வென்று கொடுத்ததன் மூலம் டி20 தொடருக்கான கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்ற பாராட்டைப் பெற்ற ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக மூன்று டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணி தொடரை வெல்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.
மேலும் ரோகித் சர்மா இல்லாததால் டி20 தொடருக்கான ஆக்டிங் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவை இலங்கை அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி கேப்டனாக நியமித்துள்ளது.
ஆனால் கேப்டனாக செயல்படுவதற்கு ஹர்திக் பாண்டியா தகுதியானவர் இல்லை என சில முன்னால் வீரர்கள் காரணத்துடன் விளக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கீழ் சொல்லப்பட்ட மூன்று காரணங்களை வைத்து ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கான தகுதியான கேப்டன் இல்லை என தெரிவிக்கின்றனர்.
அப்படிப்பட்ட 3 காரணங்களை இங்கு காண்போம்..
கேப்டனாக சர்வதேச போட்டியில் போதுமான அனுபவம் கிடையாது..
2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கோப்பையை வெற்றி பெற்று கொடுத்த இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்காக வெறும் இரண்டு தொடர்களில்(ஐயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்) மட்டுமே கேப்டனாக செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும் சமீபத்தில்,நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்டு போட்டியை சமன் செய்த ஹர்திக் பாண்டியா, இதை தவிர சர்வதேச இந்தியா அணியின் கேப்டனாக செயல்பட்ட ரெக்கார்ட் இல்லாததால் அவருக்கு சர்வதேச போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இல்லை எனவும் இதனால் அவர் நிரந்தர கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் இல்லை என தெரிவித்து வருகின்றனர்.