மத்த பேட்ஸ்மேன்களெல்லாம் தான்தோன்றித்தனமாக செயல்பட்டபோது கே.எல் ராகுல் மட்டும் தான் பொறுப்பாக விளையாடியுள்ளார் ; முன்னாள் வீரர் பாராட்டு !!

மத்த பேட்ஸ்மேன்களெல்லாம் தான்தோன்றித்தனமாக செயல்பட்டபோது கே.எல் ராகுல் மட்டும் தான் பொறுப்பாக விளையாடியுள்ளார் ; முன்னாள் வீரர் பாராட்டு..

மத்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் சிந்திக்காத ஒன்றை கே எல் ராகுல் சிந்தித்து செயல்படுத்தியுள்ளார் என கே எல் ராகுலின் சிறப்பான ஆட்டம் குறித்து முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக வளம் வந்த கே.எல் ராகுல் 2022 ஐபிஎல் தொடருக்கு பின் ஏற்பட்ட காயம் மற்றும் கொரோனா தொற்று ஆகிய காரணத்தால் நீண்ட காலம் விளையாடாமல் இருந்தார். பின் ஆசியக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் விளையாட துவங்கிய கே.எல் ராகுலால் முன்பை போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படுவார்.. அடுத்த தொடரில் சிறப்பாக செயல்படுவார்.. என இந்திய அணி இவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்தும், இவரால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை இதனால் இந்திய அணியில் முக்கியத்துவத்தை இழந்த கே எல் ராகுல் இந்திய அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்தும் தூக்கப்பட்டுள்ளார்.

இருந்த போதும் இவர் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக இலங்கை எதிரான ஒரு நாள் தொடரில் இவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரின் முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனத்தை பெற்ற கே எல் ராகுல், இரண்டாவது ஒருநாள் போட்டியில் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு 103 பந்துகளுக்கு 64 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.

இவ்வளவு வாய்ப்பு கொடுத்தால் எந்த வீரராக இருந்தாலும் விளையாடி விடலாம் என்ற விமர்சனம் ஒருபுறமிருந்தாலும்,இந்தி அணி இக்கட்டான நிலைமையில் இருக்கும் பொழுது பொறுப்புடன் விளையாடியதற்காக ஒரு பக்கம் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையான கருத்துக்களை பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப்., இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே எல் ராகுல் செயல்பட்ட விதம் குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முகமது கைஃப் பேசுகையில்,“கே.எல் ராகுல் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வருகிறார். நடந்து முடிந்த வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கே.எல் ராகுலுக்கு மோசமாக அமைந்தது. இதனால் துணை கேப்டன் பதவியிலவ்ருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 3-4 மாதத்தில் கேல் ராகுல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டார். ஆனால் அவர் ஐந்தாவது பேட்டிங் பொசிஷனில் தான் அதிரடியாக விளையாடினார்.

*குறிப்பாக நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகவும் கவனமாக விளையாடிய கே.எல் ராகுல் அதிரடியை கடைபிடிக்காமல் விக்கெட் கையில் இருப்பதை உணர்ந்து பொறுமையுடன் விளையாட துவங்கினார். குறைந்த இலக்கு இருப்பதை மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் அதை மறந்து விட்டு அதிரடியாக செயல்பட வேண்டும் என நினைத்த நிலையில் கே எல் ராகுல் அந்த போட்டியில் தன்னுடைய பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்,இது அவரின் பக்குவத்தை உணர்த்துகிறது.” என கே.எல் ராகுல் குறித்து முகமது கைஃப் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.