கே.எல் ராகுலுக்கு ஆப்பு… சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை; ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ !!

கே.எல் ராகுலுக்கு ஆப்பு… சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை; ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இலங்கை அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுலின் துணை பதவியில் இருந்து நீக்கியுள்ள பிசிசிஐ., இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது.

சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், வாசிங்டன் சுந்தர் பொன்ற நட்சத்திர வீரர்கள் பலருக்கு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ், உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

 

Mohamed:

This website uses cookies.