பெரிய அநீதி… இவருக்கு மட்டும் ஏண்டா இந்த நிலைமை..? மீண்டும் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்சன்; வெறுப்பான ரசிகர்கள்
விண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸின் பர்படாஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இஷான் கிஷனே விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். இது தவிர பேட்ஸ்மேன்களாக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன், ஷர்துல் தாகூருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும், வேகப்பந்து வீச்சாளர்களாக உம்ரன் மாலிக் இடம்பெற்றுள்ளார். முகமது சிராஜிற்கு விண்டீஸ் அணியுடனான நடப்பு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சஞ்சு சாம்சன் காரணமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் சில;