2011 உலகக்கோப்பை வென்ற வீரர்கள் மேட்ச் பிக்சிங்! பிசிசிஐ விசாரணை
கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றது. இந்த உலகக்கோப்பை சென்ற அணியில் உள்ள இந்திய வீரர் ஒருவர் உள்ளூர் போட்டியில் மிகப்பெரிய அளவிலான தொகைக்கு மேட்ச் பிக்சிங் செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூரில் ஒரு டி20 தொடர் நடந்தது.

இந்த தொடர் ராஜஸ்தானில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையேயான டி20 தொடராகும். இது ராஜபுதனர்கள் டி20 லீக் என பெயரரிடப்பட்ட டி20 தொடராகும். இந்த டி20 தொடரின் இறுதி போட்டியில் முன்னாள் இந்திய வீரர் ஒருவர் மிகபெரிய தொகைக்கு பிக்சிங் செய்து தனது அணியை தோற்கடித்துள்ளார்.
இந்த செய்தியை அறிந்த பிசிசிஐ தற்போது ராஜஸ்தான் போலீயிடம் இதனை விசாரிக்க அணுகியுள்ளது. இந்த ராஜஸ்தான் போலீஸ் தற்போது அந்த குறிப்பிட்ட வீரரை பிடித்து விசாரித்து வருகிறது. மேலும், இது ஒரு மிகப்பெரிய பிக்சிங் தொடர்க்அக மாறிள்ளது.

இதுபோன்ற தனியார் டி20 தொடரினை அந்த பிக்சிங் செய்யும் புக்கிகள் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இந்த தொடரினையும் அந்த கண்ணோட்டத்தில் தான் நடத்தியுள்ளதாக தெரிகிறது.

தற்போது அந்த குறிப்பிட்ட கடைசி ஓவரில் 12 ரன் தேவைப்பட்ட நிலையில் வைட் பந்து வீசி ஒரே ஓவரில் 8 ரன் கொடுத்துள்ளார். இதனை தற்போது பிசிசிஐ உன்னிப்பாக விசாரித்து வருகிறது.