இந்தியா ‘ஏ’ அணி தென் ஆப்பிரிக்கா உடன் தோல்வி அடைந்தது

இந்தியா 'ஏ' அணி தென் ஆப்பிரிக்கா உடன் தோல்வி அடைந்தது 2இந்தியா 'ஏ' அணி தென் ஆப்பிரிக்கா உடன் தோல்வி அடைந்தது 2

இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியை வீழ்த்தி இந்தியா ‘ஏ’ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இந்தியா ‘ஏ’ – தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 12-ந்தேதி தொடங்கியது.

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் குக் மற்றும் மர்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினா்ரகள். குக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அவருக்கு அடுத்தப்படியாக மில்லர் 78 ரன்கள் சேர்க்க தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் மொகமது சிராஜ், நதீம் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆர். சமார்த், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே சமார்த் ரன்அவுட் மூலம வெளியேறினார். இஷான் கிஷன் ஆட்டத்தின் 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென விழுந்தது. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 120 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் அய்யர் 31 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 26 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். முதல் இன்னிங்சில் 226 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

 

மர்கிராம் (79), செகண்ட் (74) ஆகியோரின் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 446 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா ‘ஏ’.

பின்னர் 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சட்டர்ஜி 20 ரன்னிலும், சமார்த் 24 ரன்னிலும் வெளியேற, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த கருண் நாயர் (30, பவ்னே (46), இஷான் கிஷன் (39), நதீம் (28) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சில் 211 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணி 235 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

 

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles
whatsapp
line