முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி - இங்கிலாந்து லயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ 1
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி அரை சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ‘ஏ’ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பந்து வீச்சை தேர்வு செய்தது.முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி - இங்கிலாந்து லயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ 2
அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் சாம் ஹெய்ன், லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
இருவரும் சேர்ந்து 150 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய சாம்
ஹெயின் 108 ரன்களும், லியம் லிவிங்ஸ்டோன் 83 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி - இங்கிலாந்து லயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ 3
இந்தியா ஏ சார்பில் தீபக் சாஹர், கலீல் அகமது தலா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ரிஷப் பந்த் 15 ரன்னிலும், மயங்க் அகர்வால் 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 20 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும், ஹனுமா விஹாரி 37 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த குருணால் பாண்ட்யா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி - இங்கிலாந்து லயன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ 4
India A’s Deepak Chahar celebrates taking the wicket of West Indies A Andre McCarthy during the one day tour match at the The County Ground, Northampton. (Photo by David Davies/PA Images via Getty Images)
இறுதியில், இந்தியா ஏ அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *