லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது 1
LONDON, ENGLAND - AUGUST 10: James Anderson of England salutes the crowd after taking a five wicket haul during day two of the 2nd Specsavers Test between England and India at Lord's Cricket Ground on August 10, 2018 in London, England. (Photo by Gareth Copley/Getty Images)

இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் இரண்டாம் நாளில் போட்டி தொடங்கியது. இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் டேவிட் மலன், ஸ்டோக்ஸுக்கு பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர். லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது 2

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஈரப்பதமான ஆடுகளம் மற்றும் மேகமூட்டமான வானிலையைக் கருத்தில் கொண்டு பந்து வீச்சை அந்த அணி தேர்வு செய்தது. அது சரிதான் என்பது போல பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரின் 5 வது பந்தில் போல்டானார் முரளி விஜய். அடுத்து ராகுலுடன் இணைந்தார் புஜாரா. ராகுல் 8 ரன்னில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆக, கேப்டன் விராத் வந்தார்.

6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின் ஆட்டம் தொடங்கியதும் கோலியின் தவறான அழைப்பால் புஜாரா ரன் அவுட் ஆனார். அடுத்து ரஹானே வந்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ’ஸ்விங்’கை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். கோலி 24 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, ரஹானேவும் அஸ்வினும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றனர்.

லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது

இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது
அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது 3
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.
https://twitter.com/Guptastats92/status/1027968829370953728

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *