அணில் கும்ப்ளே போன பிறகு இந்தியாவை காப்பாற்ற முடியாது என கூறினார்கள். தற்போது அஸ்வின் அதை முறியடித்திருக்கிறார் என்று பேட்டியளித்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தி வருகிறார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரை கூறலாம்.
முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான கட்டத்தில் 58 ரன்கள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை 300 கூட எட்ட முடியாத நிலை இருந்தபோது, 400 ரன்கள் எட்டுவதற்கு உதவினார். இரண்டாவது டெஸ்டில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த பிறகு 8வது களமிறங்கி 42 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களை தன் வசம் வைத்திருக்கிறார். 3000 ரன்களை கடந்து புதிய சாதனைகளையும் படைத்திருக்கிறார். 449 விக்கெட்டுகள் மற்றும் 3000+ ரன்கள் என ஒட்டுமொத்தமாக அபாரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த கால லெஜெண்ட் அனில் கும்ப்ளே உடன் அஸ்வினை ஒப்பிட்டு பாராட்டி பேசி இருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவர் பேசுகையில், கடந்த காலங்களில் அணில் கும்ப்ளே இந்திய அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணிகள் பயப்படுவர். ஆனால் அவர் ஓய்வு அறிவித்த பிறகு அடுத்த 10 ஆண்டுகளாக அவரைப் போன்ற மேட்ச் வின்னர் எவரும் இல்லை. இந்திய மைதானங்களில் இனி எளிதாக வென்று விடலாம் அணில் கும்பலை போன்ற வீரர் கிடைக்கவே மாட்டார் என்ற பல்வேறு விமர்சனங்கள் கருத்துக்கள் வந்தன.
ரவிச்சந்திரன் அஸ்வின் அப்போதுதான் வளர்ந்து கொண்டு இருந்தார். கடந்த ஐந்து ஆறுகள் ஆண்டுகளாக இந்திய அணி முழுமையாக அஸ்வினை நம்பியது. அதற்கு செயல்பாடு மூலம் பதில் கொடுத்திருக்கிறார் அஸ்வின்.
வங்கதேசம் தொடரிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அசத்தியுள்ளார். இந்தியா போன்ற மைதானங்களில் தற்போது அஸ்வினை எதிர்கொள்வதற்கு எதிரணிகள் பயப்படுகின்றனர். கும்ப்ளே இடத்தை நிரப்பி, அதற்கு அதிகமாகவும் அஸ்வின் செயல்பட்டு வருகிறார். அஸ்வின் ஒரு லெஜெண்ட்.” என பெருமிதமாக பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.