மேட்ச் பிக்சிங்கில் இவர்கள் கில்லாடிகள்: தேவையில்லாமல் சுரண்டும் முன்னாள் பாக் வீரர் 1

உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த அக்யூப் ஜாவித், மேட்ச்-பிக்சிங்கின் கூடாரம் இந்தியாதான் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் ஜாவித். இந்தியாதான் அனைத்து வகை மேட்ச்-பிக்சிங்கிற்கும் ஆணிவேர் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்யூப் ஜாவித் கூறுகையில் ‘‘கடந்த கால ஐபிஎல் தொடர் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. மேட்ச்-பிக்சிங் மாஃபியாக்களின் கூடாரம் இந்தியாதான் என்று நினைக்கிறேன்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது அதை ஊக்கப்படுத்துவதாக அமையும். மேட்ச்-பிக்சிங்கிற்கு எதிராக இருப்பவர்களுக்கு இந்த நடைமுறை காயத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.மேட்ச் பிக்சிங்கில் இவர்கள் கில்லாடிகள்: தேவையில்லாமல் சுரண்டும் முன்னாள் பாக் வீரர் 2

மேட்ச் பிக்சிங் காரணமாக இரண்டு ஐபிஎல் அணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, சில வீரர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சிக்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் 3 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளில் இரண்டு பிரிவுகளின் கீழ் உமர் அக்மல் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவருக்க்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இவரைத் தடை செய்ததையடுத்து முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறும்போது இவர்களையெல்லாம் சிறையில் தள்ள வேண்டும் என்றார். உமர் அக்மல் 16 டெஸ்ட், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்தன, ஒருமுறை சமீபமாக உடற்தகுதி மருத்துவர் உடல் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூற அவர் முன் ஆடைகளைக் களைந்து எங்கு உடல் கொழுப்பு இருக்கிறது என்று காட்டுங்கள் என்று கிண்டல் செய்ததும் பெரிய சர்ச்சையானது, ஆனால் அதிலிருந்து தப்பினார்.மேட்ச் பிக்சிங்கில் இவர்கள் கில்லாடிகள்: தேவையில்லாமல் சுரண்டும் முன்னாள் பாக் வீரர் 3

இந்நிலையில் ரமீஸ் ராஜா கூறும்போது, “ஆகவே… உமர் அக்மல் அதிகாரப்பூர்வமாக முட்டாள்கள் பட்டியலில் இணைந்து விட்டார். 3 ஆண்டுகள் தடை. திறமை எப்படி வீணடிக்கப்படுகிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க பாகிஸ்தான் சட்டமியற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. கம்பி எண்ண வேண்டியதுதான். இல்லையெனில் இன்னும் இது போன்ற சூதாட்டங்கள் நடந்து நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுவதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியதுதான்.” என்றார்.

ஏற்கெனவே ஆமிர், ஷர்ஜீல் கான் ஆகியோரை மீண்டு சேர்த்ததற்காக ரமீஸ் ராஜா சாடிய போது, இந்த வீரர்கள் அணிக்குள் வரக்கூடாது, ஏதாவது மளிகைக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *