இவர்களை விட்டால் வேற ஆளே இல்லையா.. தோத்து போய்டாலே பும்ரா, சமி இல்லைன்னு காரணம் சொல்றீங்க – முன்னாள் இந்திய வீரர்!

பும்ரா மற்றும் முகமது சமி இருவரை தவிர வேறு பவுலர்களே இந்திய அணியில் இல்லையா? என்று கடுமையாக சாடு இருக்கிறார் முன்னாள் வீரர் சபா கரீம்.

இந்த்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி20 உலககோப்பை அணியில் இடம் பிடித்துவிட்டு பின்னர் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக முகமது சமி உள்ள எடுத்துவரப்பட்டார்.

தற்போது நடைபெறும் பங்களாதேஷ் அணியுடன் நடந்த ஒருநாள் தொடருக்கு முன்பு காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார் முகமது சமி. பங்களாதேஷ் உடன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய தீபக் சகர் காலில் ஏற்பட்ட காயத்தினால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார்.

இப்படி இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயத்தினால் அவதிப்பட்டு வருவதால், பவுலிங்கில் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.

பும்ரா மற்றும் முகமது சமி ஆகியவை மட்டுமே நம்பி இந்திய அணி இருந்து விடக்கூடாது. அதேபோல் சுழல் பந்துவீச்சிலும் ஜடேஜாவை மட்டுமே நம்பி இருந்து விடக்கூடாது என்று கருத்தை தெரிவித்ததோடு சில அறிவுரைகளையும் கூறி இருக்கிறார் சபா கரிம். அவர் கூறிதாவது:

“பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் அடிக்கடி காயம் காரணமாக வெளியேறி விடுகிறார்கள். ஆகையால் வெறுமனே அவர்களை மட்டும் நம்பி இல்லாமல் அடுத்த கட்ட பவுலர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்து தொடர்ச்சியாக அனுபவத்தை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களைச் சார்ந்து இருக்கும் காலம் முடிந்து விட்டது. அதேபோல் சுழல்பந்து வீச்சிலும் சகல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இல்லை என்றால் அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர் போன்றோரை விளையாட வைத்து அனுபவம் மிக்க வீரர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் இவர் இல்லை, அவர் இல்லை என்று பந்துவீச்சில் செய்யும் தவறுகளுக்கு காரணம் கூறுவது எந்த ஒரு அணிக்கும் ஆரோக்கியமானதாக இருந்து விடாது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.