டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தேர்வு! இந்திய அணிக்கு புதிய கேப்டன்! 1

நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3வது மற்றும் 4வது போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை, 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

image

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. அதேவேளையில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அடைய நியூசிலாந்து முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் சில வீரர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ரிஷப் பந்த் களமிறக்கப்பட வாய்ப்பு உண்டு. இன்று பிற்பகல் 12.20 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது.

 

அணிகள்:

நியூசிலாந்து : மார்ட்டின் கப்டில், கொலின் முன்ரோ, டிம் செயிஃபெர்ட் , ரோஸ் டெய்லர், டாம் புரூஸ், டேரில் மிட்செல், மிட்செல் , ஸ்காட் , டிம் சவுத்தி (இ), சோதி ஹமிஷ் பென்னட்

இந்தியா : லோகேஷ் ராகுல் , சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா , ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, யூஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *