இந்தியா – தென் ஆப்பிரிக்க முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா – தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று காலை விசாகபட்டினத்தில் தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 36 டெஸ்ட் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா 15 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வென்றுள்ளன. 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
இன்று முதல் 6 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் தொடரும் 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை புனேயில் இரண்டாவது டெஸ்ட் தொடரும் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
இந்திய அணி இடம் பெற்றுள்ள பதினொரு வீரர்களின் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ஹனுமா விஹாரி, ரித்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா

விருத்திமான் சஹா (Wriddhiman Saha) மற்றும் ஆர். அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இரு வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரிஷாப் பந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது அணியில் இடம் பிடித்திருந்த விருத்திமான் சஹா வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தமுறை சஹாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரிஷாப் பந்த் சரியாக செயல்படததால் சஹாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
குல்தீப் யாதவ், சுப்மான் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. இந்த தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இருப்பார்கள்.