ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன் இல்லை.. புதிய வீரர் சேர்ப்பு; ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதற்கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. அதன் பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. இவை இரண்டையும் கைப்பற்றிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் டெஸ்ட் தொடர் முடிவுற்றதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் தொடரின்போது காயம் காரணமாக விலகி இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். அக்சர் பட்டேல் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக ராஜத் பட்டிடார் மற்றும் சபாஷ் அகமது இருவரும் உள்ள எடுத்துவரப்பட்டிருந்தனர். தற்போது இவர்கள் இருவரின் பெயரும் நீக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கத் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது முதல்முறையாக ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. இந்த தொடரிலும் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சொந்த காரணங்களுக்காக கேப்டன் ரோகித் சர்மா முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. ஆகையால் ஹார்திக் பாண்டியா அந்த கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடவுள்ளார். இவர் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு ஏற்கவுள்ளார். அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் சர்மா விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷான் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கத்.

Mohamed:

This website uses cookies.