இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஷிகார் தவான் அவுட் ஆகினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இவரும் ரோகித் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்து வருகின்றனர். அதிரடியாக விளையாடி வரும் விராட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு ஜாவித் மியாண்டட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எடுத்திருந்த 1930 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார். அதன் பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த கோலி அரைசதம் கடந்தார்.

ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்த போட்டியில் துவக்கத்திலேயே சொதப்ப. இந்த முறை கேப்டன் விராட் கோலி அணியை மீட்க களமிறங்கினார். அவருடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயே இருவரும் அற்புதமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடுமையாகப் போராடிய விராட் கோலி 125 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 35 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயாஸ் அய்யர் 68 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த கேதர் ஜாதவ் 16 ரன்கள் விளாச இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 279 ரன்கள் குவித்தது.